சென்னையில் 15,000 பணியாளர்கள் மூலம் மீட்பு பணிகள் - தமிழக அரசு

சென்னையில் 15,000 பணியாளர்கள் மூலம் மீட்பு பணிகள் - தமிழக அரசு


சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காலைக்குள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கிய இடங்களில் 650 மின்மோட்டார்கள் மூலம் நீர் துரிதமாக வெளியேற்றப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

மேலும் பல செய்திகள்

தமிழ்நாடு


Oct 18, 2026, 10:10 IST/

கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு.. கைத்தட்டி உற்சாகப்படுத்திய CM விஜய்

Oct 18, 2026, 10:10 IST
சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் இன்று (அக்.18) ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்புகள் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த ஊழியர்களைக் கைத்தட்டி பாராட்டி உற்சாகப்படுத்தினார்.  நன்றி: சன்நியூஸ்
தமிழ்நாடு
திருப்பூர்

வேலைகள்