லோக்கல் - Lokal

நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த குழு அமைப்பு

நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த குழு அமைப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 30 கல்வியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் கற்பித்தல் முறை, கல்வி செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad