
சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் மீது ஜோர்டான் வான்வழி தாக்குதல்
ஜோர்டானில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான சம்பவத்திற்குப் பதிலடியாக, சிரியாவின் தென்பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்கள் மீது ஜோர்டான் விமானப்படை அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஜோர்டான் அரசு தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


















