கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அருகே உள்ள கடையின் ஷட்டரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக மீட்டனர். கடை ஷட்டருக்குள் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.