தேனியில் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செல்லமுத்து, ராதா, ராஜகோபால், ஜெகதீஷ் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் தங்களை மதிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அம்பாசமுத்திரத்தில் தனது மகனைக் களமிறக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், முக்கிய ஆதரவாளர்களின் இந்த விலகல் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.