மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயில் மதுரோதைய ஈசுவரமுடையார் கோயில் (அல்லது சோழீஸ்வரர் சிவன் கோயில்) ஆகும். இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் காலத்தில் சிறப்புடன் விளங்கியது. கல்வெட்டுகளில் இந்த ஊர் 'விக்ரம சோழபுரம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பல கல்வெட்டுகள் உள்ளன.