பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரில், காவல் சோதனைச் சாவடி ஒன்றில் பயங்கரமான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாகச் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரீக்-இ-தலிபான்
பாகிஸ்தான் (TTP) என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.