இந்திய தொழில்நுட்பக் கழகங்களான ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 16,598 ஆக இருந்தது. இது 2026-ல் 18,826 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 2,228 இடங்கள் அதிகரித்து, 13.4% வளர்ச்சி பதிவாகியுள்ளது. பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கூடுதல் இடங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. 2022-ல் 1,567 ஆக இருந்த பெண்களுக்கான கூடுதல் இடங்கள், 2026-ல் 3,776 ஆக அதிகரித்துள்ளன.