பானிபூரி சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

13பார்த்தது
பானிபூரி சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசுத்தமான தண்ணீர் அல்லது கெட்டுப்போன உணவு காரணமாக உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி