அமெரிக்காவிலிருந்து இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களும், முறையான ஆவணங்களின்றி வசித்தவர்களும் இந்தியக் குடிமக்கள் என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகே நாடு கடத்தப்படுகின்றனர். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் விவகாரத்தில் அமெரிக்காவுடன்
இந்தியா இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.