அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான
முடிவுகள் மற்றும் சர்வாதிகார போக்கினால் அதிருப்தி அடைந்த வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இனி எடப்பாடியை நம்பி இருப்பது வீண் என முணுமுணுத்து வருகிறார்களாம்.
பொதுக்குழுவை கூட்டி தலைமை மாற்றம் குறித்து பரிசீலனை செய்யவும், இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும் கோரிக்கை வலுத்துள்ளது. தொடர் வீழ்ச்சியில் இருந்து அதிமுக மீண்டு எழுமா என்று தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.