கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி

3901பார்த்தது
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி
சூடானில் உள்நாட்டு மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தின் கிராமங்களுக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். டிபி, லுவிரி கிராமங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி