தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1,729 சூப்பர்வைசர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்ப் பெரும் திட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.