சென்னையில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கையாக 250 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுமார் 1.40 லட்சம் பேர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.