திண்டுக்கல் மாவட்டம் எஸ்.வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நிஷ்வந்த் (13), தருண் (8) மற்றும் சபரி (9) ஆகிய 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.