மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் வாடகை குடியிருப்பில், திபேஷ் மேத்தா (52), குமார் மேத்தா (50) மற்றும் கேவனா மேத்தா (48) ஆகிய மூன்று சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இன்று காலை வீட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றினர். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் நிதி நெருக்கடியே தற்கொலைக்குக் காரணம் என அவர்கள் குஜராத்தி மொழியில் பதிவு செய்த காணொளியில் குறிப்பிட்டுள்ளனர். சகோதரர்கள் புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.