ஈரோடு பாசூர் காவிரி ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது கால் வழுக்கி நீரில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர். நீர
ில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்ற நாமக்கல்லைச் சேர்ந்த பெருமாள் (35) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட பாரதி (34), பிரதீபா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்