திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சதீஷ் (24) என்பவருக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ பிரிவில் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது குற்றவாளி சதீஷிற்கு 30 ஆண்டு சிறையுடன், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.