2022ம் ஆண்டு சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கல் சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விண்கல் செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால புவியியல் வரலாறு குறித்த முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது. மேலும், இந்த விண்கல்லை உருவாக்கிய பாறைகள் ஒரு காலத்தில் தண்ணீருடன் வினைபுரிந்ததற்கான தடயங்களும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் பண்டைய காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் மேலும் அறிந்துள்ளனர்.