கேரளாவின் கோழிக்கோடு குட்டிக்கட்டூரில், கடந்த அக்., 1-ஆம் தேதி 4 மாதக் குழந்தை உயிரிழந்த வழக்கில், குழந்தையின் பெற்றோர் ஷிஜின் மற்றும் அஞ்சனா ஆகியோரை மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவு என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை, துன்புறுத்தலால் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. தந்தையின் தாக்குதலால் குழந்தை இறந்ததாகவும், அதனை தாய் மறைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.