திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 5 பேர் பலி

0பார்த்தது
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 5 பேர் பலி
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்ற காப்பகத்தை சேர்ந்த 4 மாணவிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் தேன்மொழி உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அரசு காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவிகள், தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏரிக்கு குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி