டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

10பார்த்தது
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவனான சந்தோஷ் குமார், டெங்கு காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெங்கு பரவலை தடுக்க தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி