காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்தில் இருந்து பயந்து ஓடிய குற்றச்சாட்டில், ராணுவ வீரர்கள் 66 பேருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அதிரடியாக மரண தண்டனை விதித்துள்ளது. கிழக்கு காங்கோ பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வீரர்கள் தப்பியோடுவதைத் தடுக்கவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போர்க்களக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.