தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்

2865பார்த்தது
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி இதுவரை 96.21% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 100% இலக்கை எட்ட விடுபட்டவர்களுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள அட்டைதாரர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி