காவல் ஆய்வாளர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

3பார்த்தது
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் முனிசேகர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கினை விசாரித்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள் மீதும் உடனடியாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு புகாரில் உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி