சென்னையில் நேற்று நடைபெற்ற 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்வு குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ள நடிகர்
தனுஷ், இந்த குளறுபடிக்கு யாரையும் குற்றம் சாட்டாமல் தானே முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
நன்றி: News18