'ஓம்' திரைப்படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக CM விஜய்க்கு நடிகர்
தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். காலை 6 மணி காட்சிக்கு வரும் ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்த கூடாது என்று கூறியுள்ளார். மேலும், திரையரங்குகளில் அனைவரும் மிகவும் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் விடுத்துள்ள இந்த அன்பான வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.