மும்பை ஜூஹு பகுதியில் உள்ள
புஷ்பா நர்சி பூங்கா அருகே, நேற்று (அக்.18) மாலை பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது மர்ம நபர்கள் திடீரென
துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் கையில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் குறித்த அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:PT