கோவையில் ரோடு ஷோ நடத்திய நடிகை திரிஷா

3பார்த்தது
கோவையில் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு நடிகை திரிஷா இன்று (அக்.24) வருகை தந்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடிகையை நேரில் காணவும், புகைப்படம் எடுக்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். கடையைத் திறந்து வைத்த பின்னர், திரிஷா ரோடு ஷோ நடத்தினார். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். நடிகை திரிஷாவைக் காண்பதற்காகப் பலரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். நன்றி: X

தொடர்புடைய செய்தி