அமெரிக்க நீதிமன்றத்தில்
அதானி குழுமத் தலைவர் கவுதம்
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர்
அதானி மீது தொடரப்பட்ட குற்றவியல் பத்திர மோசடி வழக்கு, அமெரிக்க நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ்ஸால் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோசடி சதி, பத்திரம் மோசடி உள்ளிட்ட மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் மீண்டும் தாக்கல் செய்ய முடியாத வகையில் முடிவுக்கு வந்துள்ளன. வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்ட மீறல்கள் மற்றும் நீதித் தடை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.