திருவள்ளூரில் உள்ள 10 தொகுதிகளிலும் 'நாம்' 10-க்கு 10 வென்றுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்தார். இதற்கு திருத்தணி தொகுதியில் அதிமுக தான் வென்றுள்ளது என எதிரில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து 10-ல் 9 தொகுதிகளில் வென்றோம் என திருத்தி கூறிய அவர், எல்லாம் நமது தானே.. அதிமுகவும் நாமும் ஒன்றுதானே என்றும் பதிலளித்தார். அதற்கு சபாநாயகர் பிரபாகர், அந்த உறவை பற்றியெல்லாம் அவைக்கு தெரியாது அது பற்றி பேச வேண்டாம் என சிரித்துக்கொண்டே கூறினார்.