அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். அனைவரையும் அரவணைக்க வேண்டும் எனக் கூறியவர்களை நீக்கியவர் பழனிசாமி என்றும், தனது அணுகுமுறையை மாற்றாவிட்டால் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பழனிசாமி தலைமையில் அதிமுக 11 தோல்விகளைச் சந்தித்துள்ளதாகவும், கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருவதாகவும் கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியிருப்பார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.