அதிமுக பிரமுகர் துரை சேனாபதி கைது

20பார்த்தது
அதிமுக பிரமுகர் துரை சேனாபதி கைது
முதல்வர் விஜய்னின் ஈரோடு வருகைக்காக முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் அதிமுக ஈரோடு மண்டல இணைச் செயலாளர் துரை சேனாபதி கைது செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் ஐடி விங் செயலாளர் ராஜ்சத்யன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “முன்னெச்சரிக்கை கைது” என்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீதோ, குற்றவாளிகள் மீதோ எடுக்க வேண்டிய நடவடிக்கை. அதை விடுத்து, சமூக வலைதளத்தில் செயல்பட்டு வரும் ஒருவரை, எந்தக் காரணமும் இல்லாமல் கைது செய்திருப்பது ஏற்புடையது அல்ல என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி