அதிமுக பிரமுகர் மன்னன் கைது.. இபிஎஸ் கண்டனம்

0பார்த்தது
அதிமுக பிரமுகர் மன்னன் கைது.. இபிஎஸ் கண்டனம்
அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னன், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக எம்எல்ஏவை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக. எம்எல்ஏ முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, மன்னனை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி