சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான ஏர்
இந்தியா விமான சேவை நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர்
இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு ஜெட்டாவிற்கான விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை டிசம்பர் 8 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஏர்
இந்தியா தெரிவித்துள்ளது.