தமிழ் திரையுலகின் மூத்த
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு நடிகர்
அஜித்குமார் இரங்கல் தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். அஜித் நடித்த ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’ உள்ளிட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். இந்தப் படங்களின் பாடல்கள் அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய இடம்பிடித்தன. இந்நிலையில், தேவாவின் மறைவுக்கு அஜித் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்றும், இரங்கல் அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.