அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்'.. மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்

1810பார்த்தது
அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்'.. மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்
நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'அஜித்குமார் சார் இரவு 1 மணிக்கு போன் செய்து, 'கிளாடியேட்டர்ஸ்' படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளதாக பாராட்டினார். அவர் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அன்று இரவு தூக்கமே வரவில்லை' என்றார். அஜித்தின் கார் ரேஸ் பயணம் குறித்த ஆவணப்படமான 'கிளாடியேட்டர்ஸ்'-ஐ இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி