நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக
திமுக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டெல்லி செல்ல அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும், எந்தக் கட்சியையும் பாராட்டியோ அல்லது விமர்சித்தோ பேசக்கூடாது என்றும் எம்.பி.க்களுக்குத்
திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.