சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல குழுவின் 31-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை பார்வையிட திட்டமிட்டிருந்த அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவளத்தில் இருந்து சென்னை திரும்பும் அமித் ஷா, அங்கிருந்து நேரடியாக டெல்லிக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.