அமுல் பிராண்டின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஜி.சி.எம்.எம்.எஃப் நிறுவனம், நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை பால் விலையை உயர்த்துகிறது. இதன்படி ‘அமுல் தாஜா’ டோன்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.2-ம், ‘அமுல் கோல்டு’ பாலின் விலை லிட்டருக்கு ரூ.4-ம் உயர்த்தப்படுகிறது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் உள்ளிட்ட உள்ளீட்டுச் செலவுகள் கடுமையாக அதிகரித்ததன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.