திருமணமான பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்படும் என்றும், பயனாளிகள் எளிதில் விண்ணப்பிக்க விரைவில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.