சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்ததையடுத்து 9-வது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அவரது ஓட்டுநர் பெருமாள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டிலும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தினர். இதுவரை 13 சிறுமிகள் தொடர்பான 9 வழக்குகளில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.