தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, எஸ்ஐஆர் நடைமுறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 12ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களைச் சீரமைத்து, அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.