பாலியல் போக்சோ வழக்கில் சிறையில் உள்ள ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அர்ச்சனாவுக்கு விசாரணையின் போது திடீரென மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து அவரது வழக்கறிஞர் SIT அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜரானார். அர்ச்சனா நேரில் ஆஜராக கால அவகாசம் தேவை என கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.