
தந்தை கண்முன்னே 2 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
தருமபுரி மாவட்டம் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டலப்பட்டி அருகே ஹரி என்பவர் ஓட்டிச்சென்ற பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் பைக்கில் இருந்த கதிர்வேல் (6), சஞ்சய் (3) ஆகிய இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தந்தை ஹரி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.































