
திருச்சி பெண்ணை தாக்கும் திருநங்கை சிசிடிவி காட்சி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்தில் பயணித்த ரஹீமா என்ற பெண்ணிடம் யாசகம் கேட்டுள்ளார் ஒரு திருநங்கை. யாசகம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த திருநங்கை, ரஹீமாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ரஹீமா கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர்.










