ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள மறைந்த Ex. CM கலைஞர் கருணாநிதியின் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் சிலை மற்றும் கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுகவினரின் இந்தத் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.