ஆசிய விளையாட்டு போட்டியில்
இந்தியா மேலும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் 2 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன்
இந்தியா பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 98 தங்கம், 37 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 159 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனா முதல் இடத்தில் தொடர்கிறது. 46 நாடுகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.