மதுரை மத்திய சிறைச்சாலையில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரில் குளிக்க முயன்ற கைதியை காவலர் ஒருவர் கண்டித்து தடுத்துள்ளார். ஆழ்குழாயில் உள்ள நீருக்கு பதிலாக குடிநீரை வாளியில் பிடித்துச் சென்றதால் கைதிக்கும், காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கைதி காவலர் தெய்வநாயகத்தின் முகத்தில் தாக்கிய நிலையில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.