திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஜாமீன் வழங்க சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், அன்பில் மகேஷ் அக்டோபர் 26-ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கில் அன்பில் மகேஷிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியதை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.